இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சில் 72.3 ஓவரின் போது 195 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. டானியல் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.இந்திய அணி சார்பில் கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.ஆஸ்திரேலியா பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது அந்த அணியின் முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 133 ரன்களை எடுத்திருந்தது6 விக்கெட்டுகளை இழந்திருந்தது .இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 70 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி 15.5 ஓவரின் போது 70/2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 27 ரன்களுடனும் மற்றும் கில் 35 ரன்களுடன் இருந்தபோது வெற்றி பெற்றது
.ஆஸ்திரேலிய பந்துவீச்சை பொறுத்தவரை Mitchell Starc மற்றும் Pat Cummins தல ஒரு விக்கெட்களை எடுத்தனர்AUS vs IND: Wasim Jaffer Savagely Trolls Michael Vaughan After India’s MCG Win https://t.co/q9PORT7bjv
— Digitalfyme (@Digitalfyme1) December 29, 2020
எனவே இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சீரிஸில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருக்கிறது.
Gains for India in the ICC World Test Championship standings after a huge win in Melbourne 👀
— ICC (@ICC) December 29, 2020
Battle for the top two spots heats up with New Zealand following closely behind!#WTC21 pic.twitter.com/XNzFWsJfba
0 Comments